sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

/

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு


ADDED : ஆக 17, 2025 09:26 PM

Google News

ADDED : ஆக 17, 2025 09:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:வடகிழக்கு பருவமழைக்கு முன், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். முன்னெச்சரிக்கை பணிகளில் அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டுமென கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ள தடுப்பு பணிகளை விரைந்து முடிப்பது குறித்த ஆய்வுக் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில் சமீபத்தில் நடந்தது.

இதில், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், கலெக்டர் சினேகா பிறப்பித்த உத்தரவு:

தாம்பரம் மாநகராட்சி பகுதியில், வெள்ளத்தால் அதிகம் பாதிக்கும் பகுதிகளில், அதிகமான நிவாரண முகாம்களை ஏற்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள வெள்ள தடுப்பு பணிகளை, பருவமழை துவங்குவதற்குள் முடிக்க வேண்டும்.

உணவு, தண்ணீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பேரிடர் காலங்களில் மக்களை மீட்பதற்கு போதுமான படகுகள் இருக்க வேண்டும்.

சாலைகளில் மழைநீர் தேங்கினால், உடனே அகற்ற வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை மீட்பதற்கு போதுமான ரப்பர் படகுகள், உயிர் காப்பு சாதனங்கள், லைப் ஜாக்கெட், சிறு படகுகள் ஆகியவற்றை போதுமான அளவு, தீயணைப்பு மீட்புக்குழு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

தீயணைப்பு மீட்புக்குழு, உள்ளாட்சி குழுவுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

மழைக் காலங்களில் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தால், உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மின் கம்பிகள் மேல் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை அகற்றுவதற்கு, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறைகளுடன் இணைந்து, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின் வினியோகம் தடையில்லாமல் கிடைக்க வேண்டும். பருவமழை துவங்குவதற்கு முன் மின் கம்பங்கள், மின் ஒயர்கள் மற்றும் மின் மாற்றிகளை ஆய்வு செய்து, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

வெள்ள நிவாரண மையங்களை சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூட்டாக ஆய்வு செய்து, கட்டடங்களில் பழுதுகள் இருந்தால் சரி செய்ய வேண்டும்.

காவல் துறையினர் வெள்ள அபாய காலம் மற்றும் பேரிடர் காலங்களில், வருவாய்த்துறை மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி மற்றும் குளங்களின் கரைகளில் உடைப்பு ஏதேனும் கண்டறியப்பட்டால், அதை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

பேரிடர் காலங்களில் அனைத்து வகை அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை, சுகாதாரத் துறையினர் போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறைகள் மூலமாக நடைபெற்று வரும் பணிகளை, இம்மாதம் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us