/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கலெக்டர் உத்தரவு
/
போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கலெக்டர் உத்தரவு
போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கலெக்டர் உத்தரவு
போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கலெக்டர் உத்தரவு
ADDED : பிப் 06, 2024 08:14 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில், போக்சோ தொடர்பான கலந்தாய்வு கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், சப் - கலெக்டர் நாராயணசர்மா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை மற்றும் தாம்பரம் மாநகர ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையங்களில், போக்சோ வழக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில், தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர்எல்லைக்குட்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையங்களில், 200க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது தெரிய வந்தது.
குற்றப்பத்திரிகைகளை விரைவாக நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய, போலீஸ் கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதே கூட்ட அரங்கில், கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பான ஆய்வு கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடந்தது.
இதில், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை நடைபெறுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த வேண்டும் என, டாஸ்மாக் மேலாளருக்கு உத்தரவிட்டார்.

