/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை தடுப்பில் பைக் மோதி கல்லுாரி மாணவர் பலி
/
சாலை தடுப்பில் பைக் மோதி கல்லுாரி மாணவர் பலி
ADDED : ஜூலை 29, 2025 11:42 PM
சென்னை, சாலை தடுப்பில் பைக் மோதிய விபத்தில் கல்லுாரி மாணவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சென் னை, அஸ்தினாபுரம், ஜெயின் நகரை சேர்ந்தவர் சிவக்குமார்.
டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மகன் கிஷோர், 18. இவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லுாரி ஒன்றில் பி.எஸ். சி., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
அதே பகுதி நேதாஜி தெருவை சேர்ந்தவர் யோனேஷ், 16. பத்தாம் வகுப்பு முடித்துள்ளார். இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு அண்ணாநகரில் உள்ள நண்பரை பார்க்க யமாஹா -150 பைக்கில் ஜி.எஸ்.டி., சாலையில் சென்றனர். கிஷோர் பைக்கை ஓட்டிச் சென்றார். இருவரும் 'ெஹல்மெட்' அணியவில்லை.
ஆலந்துார், ஆசர்கானா அருகே உள்ள, வளைவில் வேகமாக சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்தது. இதில், இருவரும் துாக்கி வீசப்பட்டு சாலை தடுப்பில் மோதி விழுந்தனர்.
தலையில் படுகாயமடைந்த கிஷோர் சம்பவ இடத்திலேயே இறந்தார். சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிமலை போக்குவரத்து போலீசார், பலத்த காயமடைந்த யோனேஷை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

