ADDED : மார் 12, 2026 05:37 AM
அ நிறம் | அளவு
வண்டலூர்: கூடுவாஞ்சேரி அருகே, கல்லுாரி மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் லீலாசாய், 21. பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலையில், பி.பி.ஏ., 3-ம் ஆண்டு படித்துவருகிறார்.
இவர், நேற்று முன்தினம் வல்லாஞ்சேரி அருகே உள்ள ஜூஸ் கடைக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அப்போது, அதே பல்கலையில் படிக்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சில மாணவர்கள் ஜூஸ் கடைக்கு வந்துள்ளனர்.
இரு தரப்பிற்கும் வாய்த் தகராறு ஏற்பட்ட நிலையில், ஒரு மாணவர், தன்னிடமிருந்த கத்தியால் லீலாசாயை குத்தியுள்ளார். காயம் அடைந்த லீலாசாய் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
