/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலாறில் மாயமான கல்லுாரி மாணவர் 3 நாட்கள் கழித்து சடலமாக மீட்பு
/
பாலாறில் மாயமான கல்லுாரி மாணவர் 3 நாட்கள் கழித்து சடலமாக மீட்பு
பாலாறில் மாயமான கல்லுாரி மாணவர் 3 நாட்கள் கழித்து சடலமாக மீட்பு
பாலாறில் மாயமான கல்லுாரி மாணவர் 3 நாட்கள் கழித்து சடலமாக மீட்பு
ADDED : நவ 04, 2025 10:13 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பாலாறில் அடித்துச் செல்லப்பட்ட கல்லுாரி மாணவர், மூன்று நாட்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டார்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பகுதியைச் சேர்ந்தவர் சைப் அலிக்கான்,18.
இவர், செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் உள்ள 'ஹோட்டல் மேனேஜ்மென்ட்' கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 2ம் தேதி மாலை 5:00 மணிக்கு, திம்மாவரம் பகுதியில் உள்ள பாலாறில், தன் நண்பர்கள் இருவருடன் குளித்தார். அப்போது, சைப் அலிக்கான் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார். நண்பர்கள் இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்கள் வந்து பார்த்த போது, அந்த பகுதியில் இருள் சூழ்ந்ததால், தேடுவதில் சிரமம் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் காலை தீயணைப்பு வீரர்கள், ரப்பர் படகு வாயிலாக ஆற்றில் பல்வேறு இடங்களில் சைப் அலிக்கானை தேடியும் கிடைக்கவில்லை.
தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று, 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், சுற்றியுள்ளஆற்றுப்பகுதிகளில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று மதியம், தண்ணீருக்கு அடியில் புதரில் சிக்கி அழுகிய நிலையில் இருந்த சைப் அலிக்கான் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர். தற்போது மழைக்காலத்தில் நீர்நிலைகளில் அதிக அளவு தண்ணீர் செல்வதால், பொது மக்கள் நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என, போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

