/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரயில் நிலைய சாலையை ஆக்கிரமித்து ஆட்டோ நிறுத்தத்தால் பயணியர் அவதி
/
ரயில் நிலைய சாலையை ஆக்கிரமித்து ஆட்டோ நிறுத்தத்தால் பயணியர் அவதி
ரயில் நிலைய சாலையை ஆக்கிரமித்து ஆட்டோ நிறுத்தத்தால் பயணியர் அவதி
ரயில் நிலைய சாலையை ஆக்கிரமித்து ஆட்டோ நிறுத்தத்தால் பயணியர் அவதி
ADDED : ஜூன் 22, 2025 02:08 AM

செங்கல்பட்டு:ரயில் நிலையம் செல்லும் பாதையை ஆக்கிரமித்து, ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், பயணியருக்கு இடையூறு ஏற்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு ரயில் நிலையம் தென் மாவட்டங்களில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு முக்கிய சந்திப்பாக உள்ளது. மேலும் காஞ்சிபுரம், சென்னை கடற்கரையில் இருந்து வரும் மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் நின்று செல்கின்றன.
செங்கல்பட்டு நகரைச்சுற்றி கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியபவர்கள், அத்தியாவசிய பணிக்கு செல்பவர்கள், மருத்துவமனை மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் என, தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த ரயில்களில் சென்று வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் இருந்து, வெளியே செல்லும் சாலையை ஆக்கிரமித்து ஏராளமான ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணியருக்கு இடையூறு ஏற்படுகிறது.
பயணியருக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோக்களை அப்புறப்படுத்த வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே போலீசாரிடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை.
பயணியர் நலன்கருதி, சாலையில் நிறுத்தப்படும் ஆட்டோக்களை அறப்புறப்படுத்த வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.