/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி- கிழக்கு கடற்கரை சாலை மாற்றுப்பாதை மோசம்
/
புகார் பெட்டி- கிழக்கு கடற்கரை சாலை மாற்றுப்பாதை மோசம்
புகார் பெட்டி- கிழக்கு கடற்கரை சாலை மாற்றுப்பாதை மோசம்
புகார் பெட்டி- கிழக்கு கடற்கரை சாலை மாற்றுப்பாதை மோசம்
ADDED : மே 26, 2025 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம் - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழியாக விரிவாக்கம் செய்ய, கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
சாலை விரிவாக்கத்திற்காக பல்வேறு இடங்களில் மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அந்த வகையில், இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட வெண்ணாங்குப்பட்டு பகுதியில், பாலம் அமைக்க மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. மாற்றுப்பாதையில் ஜல்லிகள் பெயர்ந்து உள்ளதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
மாற்றுப்பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இ.கரண்குமார்,
செய்யூர்.