தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/புகார் பெட்டி - செங்கல்பட்டு

புகார் பெட்டி - செங்கல்பட்டு

புகார் பெட்டி - செங்கல்பட்டு


ADDED : மார் 26, 2024 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 06:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்னலில் விபத்துகள் போலீசார் தேவை

நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, சீனிவாசபுரம் சிக்னலில் தொடர்ந்து விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இப்பகுதியில் இரு மார்க்கத்திலும் செல்லும் வாகனங்கள், அங்குள்ள சிக்னல்களில் நின்று செல்லும்.

அப்போது, சிக்னல்களை சரியாக கவனிக்காத வாகன ஓட்டிகள், நின்று கொண்டிருக்கும் வாகனங்கள் மீது மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.

கடந்த ஒரு வாரத்திற்குள், இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் பலத்த காயங்களுடன் அவதிப்படுகிறனர். வாகனங்களுக்கும் சேதமும் ஏற்பட்டது.

எனவே, இப்பகுதியில், கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமித்து, விபத்து பயமின்றி வாகன ஓட்டிகளின் சீரான பயணத்திற்கு, மாவட்ட நிர்வாகம் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.

- என்.பொன்னுக்காளை,சீனிவாசபுரம்.

மழையால் சேதமான பாலம்

சீரமைப்பது எப்போது?

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, ஜெகதீஷ் நகர், அருள் நகர், எம்.ஜி.நகர் இணைப்பு தரைப்பாலம், சமீபத்தில் பெய்த மழையில்சேதம் அடைந்தது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக, அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், இதுவரை பராமரிப்பு பணிகள் துவங்கப்பட வில்லை. தரைப்பாலம் சீரமைக்கப்படாததால், சுற்றுவட்டார பகுதி மக்கள், இரண்டு கிலோ மீட்டர் துாரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, சேதமான பாலத்தைசீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மு.நாகேஸ்வரன், அருள் நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us