/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி தெருவிளக்கு, குப்பை தொட்டி இல்லாமல் மக்கள் அவதி
/
புகார் பெட்டி தெருவிளக்கு, குப்பை தொட்டி இல்லாமல் மக்கள் அவதி
புகார் பெட்டி தெருவிளக்கு, குப்பை தொட்டி இல்லாமல் மக்கள் அவதி
புகார் பெட்டி தெருவிளக்கு, குப்பை தொட்டி இல்லாமல் மக்கள் அவதி
ADDED : டிச 04, 2024 11:06 PM
தெருவிளக்கு, குப்பை தொட்டி இல்லாமல் மக்கள் அவதி
திருப்போரூர் பேரூராட்சி, நெம்மேலி செல்லும் சாலையில், தனியார் மனை பிரிவு உள்ளது. இதில், 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனை வாங்கி, வீடு கட்டி வசித்து வருகின்றனர். தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் வகையில், மனைப்பிரிவு பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
தற்போது அங்கு, தெருவிளக்கு வசதி செய்யப்படாததால், இரவில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், விஷப்பூச்சிகள் நடமாட்டத்தால், அச்சத்தில் உள்ளனர். இங்கு, குப்பை தொட்டிகள் ஏதும் அமைக்கப்படாததால், அங்குள்ள வளாகத்தில் மக்கள் குப்பையை கொட்டுகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
எனவே, மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து தெருவிளக்கு மற்றும் குப்பை தொட்டிகள் அமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.