/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி : சாலை ஓரம் தடுப்பு இல்லாத கிணற்றால் விபத்து அபாயம்
/
புகார் பெட்டி : சாலை ஓரம் தடுப்பு இல்லாத கிணற்றால் விபத்து அபாயம்
புகார் பெட்டி : சாலை ஓரம் தடுப்பு இல்லாத கிணற்றால் விபத்து அபாயம்
புகார் பெட்டி : சாலை ஓரம் தடுப்பு இல்லாத கிணற்றால் விபத்து அபாயம்
ADDED : செப் 09, 2025 12:37 AM

சாலை ஓரம் தடுப்பு இல்லாத
கிணற்றால் விபத்து அபாயம்
செ ங்கல்பட்டு - -திருப்போரூர் நெடுஞ்சாலை 25 கி.மீ., உடையது. சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையில், அந்திரேயபுரம் பகுதியில், சாலை வளைவின் அருகில் தடுப்பு இல்லாத கிணறு ஒன்று உள்ளது. சாலை வளைவில் வேகமாக திரும்பும் வாகனங்கள் தடுமாறி, கிணற்றில் விழும் அபாயம் உள்ளது.
நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை வளைவில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். அதே நேரம், கிணற்றில் தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி. மோகன சுந்தரம், அந்திரேயபுரம்.