/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி. வாகன ஓட்டிகளுக்கு இடையூறான மரக்கிளைகளை அகற்ற வேண்டும்

ADDED : செப் 02, 2025 12:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவுஞ்சூர் பகுதியில் மதுராந்தகம் - கூவத்துார் இடையே செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இருசக்கர வாகனம், கார், பேருந்து மற்றும் லாரி என, தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
சாலைக்கு அருகே நெடுஞ்சாலை துறைக்குச் சொந்தமான மரங்கள் உள்ளன. இச்சாலையில் மின் விளக்குகள் இல்லாததால், முன்னால் செல்லும் வாகனத்தை மற்ற வாகனங்கள் முந்திச் செல்ல முற்படும் போது, சாலையோரம் உள்ள மரத்தில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆ.முருகேசன். கூவத்துார்.