தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜன 23, 2024 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2024 04:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேகத்தடுப்பில் இரும்பு தகடு

வாகனங்களை மறைப்பதால் ஆபத்து

திருப்போரூர் அடுத்த இ.சி.ஆர்., சாலை முட்டுக்காடு படகு குழாம் திரும்பும் இடத்தில், வேகத்தடுப்பிற்கான இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அந்த இரும்பு தடுப்பின் மத்தியில், இரும்பு தகடு அமைக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் படகு குழாமிற்கு செல்ல சாலையை கடக்கும்போது, எதிரே வரும் வாகனங்களை இரும்பு தகடு மறைக்கிறது.

அப்போது, தடுமாற்றத்துடன் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்கின்றனர். இதனால், அங்கு விபத்து ஏற்படும் சூழலும் உருவாகிறது. எனவே, விபத்தை தவிர்க்க, இரும்பு தகடை அகற்றி மாற்று தடுப்பு அமைக்க வேண்டும்.

- எம்.விஜயகுமார், முட்டுக்காடு.

நீலமங்கலத்தில் சாலை சேதம்

அபாயத்தில் வாகன ஓட்டிகள்

பவுஞ்சூர் அருகே நீலமங்கலம் கிராமத்தில், திருக்கழுகுன்றம் செல்லும் தார்ச்சாலை உள்ளது. இந்த சாலையில், தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

சாலை நடுவே சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளதால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வ.காசிநாதன், பவுஞ்சூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us