/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்லுாரி 'சீட்' வாங்கி தருவதாக மோசடி செய்தவர் மீது புகார்
/
கல்லுாரி 'சீட்' வாங்கி தருவதாக மோசடி செய்தவர் மீது புகார்
கல்லுாரி 'சீட்' வாங்கி தருவதாக மோசடி செய்தவர் மீது புகார்
கல்லுாரி 'சீட்' வாங்கி தருவதாக மோசடி செய்தவர் மீது புகார்
ADDED : அக் 02, 2025 10:56 PM
சென்னை, கல்லுாரி 'சீட்' வாங்கி தருவதாக கூறி, பணம் பெற்று மோசடி செய்தவர் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கம், யு.ஐ., காலனியை சேர்ந்தவர் லட்சுமி சந்திரகலா, 49; ஐ.டி., ஊழியர். இவரது தம்பி அலிபாய் என்பவர் வாயிலாக, சபி சுமன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். லட்சுமி சந்திரகலாவின் மகளுக்காக, பிரபல கல்லுாரியில் சீட் வாங்கி தருவதாக கூறி, 6.16 லட்சம் ரூபாயை, சபி சுமன் கடந்த 2024 டிசம்பரில் பெற்றுள்ளார்.
ஆனால், அதன்பின் கல்லுாரியில் சீட்டும் வாங்கி தராமல், வாங்கிய பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றி வந்துள்ளார். பின், 2.5 லட்சம் ரூபாய் மட்டும் திரும்ப கொடுத்துள்ளார்.
மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து, கோடம்பாக்கம் போலீசில் லட்சுமி சந்திரகலா புகார் அளித்துள்ளார். புகாரின் உண்மைத்தன்மை குறித்து போலீார் விசாரிக்கின்றனர்.