UPDATED : செப் 21, 2026 11:36 PM
ADDED : செப் 21, 2026 06:04 PM
பவுஞ்சூர் அருகே நீலமங்கலம் ஊராட்சியில் சத்யா நகர், பாரதி நகர், பெரிய காலனி ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள நீலமங்கலம் ஏரி 300 ஏக்கர் பரப்பளவுடையது.
இந்த ஏரிக்கரை வழியாக, நெல்வாய், வடக்கு வாயலுார், சாத்தமங்கலம், பேக்கரணை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
நீலமங்கலம் பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து வரும் உபரிநீர் ஏரியைச் சென்றடையும் வகையில், நீர்வரத்து கால்வாய் உள்ளது.
இந்த கால்வாயில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், 2.50 லட்சம் ரூபாயில் தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில், கடந்தாண்டு அவ்வழியாக நெல் ஏற்றி சென்ற டிராக்டர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், தரைப்பாலம் இடிந்து சேதமடைந்தது.
இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இடிந்த தரைப்பாலத்தை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.பாரதிராஜா,
பவுஞ்சூர்.
