/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வெளிவட்ட சாலை துவக்கத்தில் குழப்பம் 'யு - டர்ன்' அமைப்பது அவசியம்
/
வெளிவட்ட சாலை துவக்கத்தில் குழப்பம் 'யு - டர்ன்' அமைப்பது அவசியம்
வெளிவட்ட சாலை துவக்கத்தில் குழப்பம் 'யு - டர்ன்' அமைப்பது அவசியம்
வெளிவட்ட சாலை துவக்கத்தில் குழப்பம் 'யு - டர்ன்' அமைப்பது அவசியம்
ADDED : செப் 01, 2025 01:58 AM

வண்டலுார்:வண்டலுாரிலிருந்து மீஞ்சூர் செல்லும் வெளிவட்ட சாலையில், வழி தவறி செல்லும் வாகன ஓட்டிகள் உடனடியாக திரும்பும்படி, முதல் 300 மீ., துாரத்திற்குள், 'யு - டர்ன்' திருப்பம் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் வாகன ஓட்டிகள், பட்டாபிராம், திருநின்றவூர், ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களுக்கு விரைவாக செல்ல, வண்டலுார் முதல் மீஞ்சூர் வரை, 62 கி.மீ., நீளமுள்ள வெளிவட்ட சாலை உள்ளது. வண்டலுார் உயிரியல் பூங்கா எதிரே, இந்த வெளிவட்ட சாலை துவங்குகிறது.
இச்சாலையின் துவக்க பகுதி குழப்பத்தை தரும் வகையில் உள்ளது.
இதனால், புதிதாக சென்னைக்கு வரும் வாகன ஓட்டிகளில் பலர், தாம்பரம் வழியாக சென்னை நோக்கிச் செல்ல சரியான வழி தெரியாமல், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஏறி பயணிக்கின்றனர்.
இப்படி, கவனக் குறைவாக வெளிவட்டச் சாலையில் நுழைந்து பயணிக்கும் வாகன ஓட்டிகள் சுதாரித்து, மீண்டும் தாம்பரம் நோக்கிச் செல்ல, எச்சரிக்கை பலகை மற்றும் 'யு - டர்ன்' திருப்பம் ஆகியவை அப்பகுதியில் இல்லை.
இதனால், இதுபோன்ற வாகன ஓட்டிகள் தங்கள் தவறை உணர்ந்து, உடனே தாம்பரம் நோக்கிச் செல்ல, வெளிவட்டச் சாலையின் முதல் 300 மீ., துாரத்திற்குள், எச்சரிக்கை பலகை மற்றும் 'யு - டர்ன்' திருப்பம் அமைக்க வேண்டியது அவசியம்.
இந்த சிரமத்தை போக்க, எச்சரிக்கை பலகை மற்றும் 'யு - டர்ன்' திருப்பத்தை உடனே அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.