தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மணமக்கள் ஊர்வலத்தால் நெரிசல்

மணமக்கள் ஊர்வலத்தால் நெரிசல்

மணமக்கள் ஊர்வலத்தால் நெரிசல்


ADDED : ஆக 23, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முகூர்த்த நாட்களில், திருக்கழுக்குன்றத்தில், தினமும் பல திருமணங்கள் நடக்கிறது. அதை முன்னிட்டு, திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, மணப்பெண் அழைப்பும் நடக்கிறது.

இங்குள்ள சதுரங்கப்பட்டினம் – செங்கல்பட்டு சாலை, மாமல்லபுரம் சாலை ஆகியவற்றில், மணமக்களுடன் நீண்டதுாரம் ஊர்வலம் செல்கின்றனர். இச்சாலைகள் குறுகிய அகலத்தில் உள்ளன. மணமக்கள் ஊர்வலம் செல்வோர், சாலையை அடைத்து நீண்டநேரம் கடக்கும் நிலையில், கடும் நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து முடங்குகிறது.

வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். மணமக்கள் அழைப்பு ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us