/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நீலாங்கரையில் அடுத்தடுத்து கொள்ளை
/
நீலாங்கரையில் அடுத்தடுத்து கொள்ளை
ADDED : பிப் 05, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலாங்கரை : இ.சி.ஆர்., வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன், 32. அதே பகுதியில், பால் வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று காலை கடை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கல்லா பெட்டியில் இருந்து, 18,000 ரூபாய் திருடப்பட்டது. நீலாங்கரை போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
இரு தினங்களுக்கு முன், ஒரு வீட்டில் 20 சவரன் நகை, 5 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. நேற்று முன்தினம், ஒரு மளிகை கடையில் பூட்டு உடைத்து திருடப்பட்டது.
நீலாங்கரை சுற்று வட்டார பகுதியில், அடுத்தடுத்து வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நடப்பதால், வியாபாரிகள் பீதியில் உள்ளனர்.

