sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பாலாற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி...தீவிரம்!:கோடையில் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு

/

பாலாற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி...தீவிரம்!:கோடையில் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு

பாலாற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி...தீவிரம்!:கோடையில் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு

பாலாற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி...தீவிரம்!:கோடையில் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு


ADDED : மார் 10, 2024 12:40 AM

Google News

ADDED : மார் 10, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:பழவேலி பாலாற்றில், ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்று, பைப் லைன் அமைக்கும் பணி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்தில் பணிகளை முடித்து, குடிநீர் வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சிக்கு பழவேலி, மாமண்டூர் பாலாற்றில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து, குழாய்கள் வாயிலாக தண்ணீர், தலைமை நீரேற்று நிலையத்திற்கு ஏற்றப்படுகிறது.

அதன்பின், நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குழாய் மூலம், தினமும் 23 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றப்படுகிறது.

பாலாற்று குடிநீர் மற்றும் கிணறுகள் வாயிலாக 45 லிட்டர் தண்ணீர், நான்கு நாட்களுக்கு ஒருமுறை, 80,000த்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், மழைக்காலங்களில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, குழாய்கள் மற்றும் கேபிள்கள் அடித்துச் செல்லப்படுவது தொடர்கதையாகி உள்ளது.

அப்போது, குடிநீர் வழங்கும் பணி பாதிக்கப்படுகிறது. இதனால், குழாய் மற்றும் கேபிள் மாற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் கூடுதலாக செலவு செய்கிறது.

இதை தவிர்க்க, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, குழாய்கள், கேபிள்கள் அடித்து செல்வதை தடுக்கவும், கூடுதல் குடிநீர் வழங்கவும், நகராட்சி நிர்வாகம் அரசுக்கு கருத்துரு அனுப்பியது.

அதன்பின், குடிநீர் பணிக்காக, மூலதன மானிய நிதி 2022 - -23ம் நிதியாண்டில், 7.60 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.

அதன்பின், பழவேலி பாலாற்றில், புதிதாக ஐந்து நீராதார கிணறுகள் மற்றும் தலா இரண்டு லட்சம் கொள்ளளவு கொண்ட, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது.

மேலும், பாலாற்றில் 4 கி.மீ., துாரத்திற்கு 18 அடி ஆழத்தில் இரும்பு துாண்கள் அமைத்து, பைப் லைன்கள், கேபிள்கள் அமைக்க, பணி உத்தரவு வழங்கப்பட்டது.

இப்பணிக்கு, 'டெண்டர்' விடப்பட்டு, தனியார் நிறுவனம் எடுத்தது. இதைத் தொடர்ந்து, புதிய குடிநீர் கிணறு அமைக்கும் பணியை, கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, நகராட்சி தலைவர் தேன்மொழி ஆகியோர் துவக்கி வைத்தனர். அதன்பின், பாலாற்றில் ஐந்து கிணறுகள் அமைக்கும் பணி நிறைவு பெற்றது.

தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, பைப்லைன்கள், கேபிள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜன், தினமும் இப்பணிகளை கண்காணித்து வருகிறார்.

மேலும், ஒரு மாதத்திற்குள் பணிகள் நிறைவுபெறும் என, பொறியாளர்கள் தெரிவித்தனர்.

நகரவாசிகளுக்கு, தங்கு தடையின்றி, குடிநீர் வினியோகம், தினமும் வழங்க உள்ளோம்.

விஜயகுமார்,நகராட்சி ஆணையர், செங்கல்பட்டு.



பாலாற்றில் ஆந்திரா அணை கட்ட எதிர்ப்பு


விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்ஆந்திர மாநில அரசு, பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கான, அடிக்கல்நாட்டு விழாவில், அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் சமீபத்தில் பங்கேற்றார். இந்த விவகாரம் தமிழகத்தில், விவசாயிகள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில அரசை கண்டித்து, பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம், கண்டன ஆர்ப்பாட்டம், மார்ச் 9ல் நடத்தப்படும் என தெரிவித்திருந்தது.
அதன்படி, காஞ்சிபுரம் காந்திரோட்டில், பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.,வுமான வேலமுருகன், விவசாயிகள் என பல தரப்பினரும் பங்கேற்றனர். அப்போது, ஆந்திர மாநில அரசின் செயல்பாடுகளை கண்டித்து, வேல்முருகன் பேசினார். அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும் எனவும், ஆந்திர, கர்நாடக மாநில அரசுகள் அம்மாநிலங்களில் கட்டிய அணைகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என, முழக்கங்களை எழுப்பினர்.








      Dinamalar
      Follow us