/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் பணி துவக்கம்
/
கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் பணி துவக்கம்
ADDED : ஏப் 17, 2025 07:50 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில் கனவு இல்லம் திட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக முதற்கட்ட பணி துவங்கியது.
தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகள், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில், தவணையாக 650 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கிராமப்புற மக்களின் கான்கிரீட் வீடு கட்டும் கனவை நினைவேற்றும் வகையில், 3.50 லட்சம் ரூபாய் மானியத்துடன், கனவு இல்லம் திட்டம் துவக்கப்பட்டது.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் ஊராட்சி கரும்பாக்கம் கிராமத்தில் கனவு இல்ல திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று கலெக்டர் அருண் ராஜ் தலைமையில் நடந்தது.
கரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஒன்பது திருநங்கைகள் உட்பட 20 பயனாளிகளுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு தலா 3.50 லட்ச ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான நிகழ்ச்சியை கலெக்டர் அருண் ராஜ் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் நாராயண சர்மா, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார் மற்றும் சிவகலைச் செல்வன், ஒன்றிய குழு தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில், வீடு கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் துவக்கி வைக்கப்பட்டன.
பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சாவித்திரி தலைமையில் வீடு கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. மின்னல் சித்தாமூர் ஊராட்சி தலைவர் பாலாஜி தலைமையில் பூமி பூஜை நடந்தது. தொடர்ந்து வீடு கட்டும் பணி நடக்கிறது.