/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடப்பாக்கம் பயணியர் நிழற்குடை ரூ.8 லட்சத்தில் கட்டுமான பணி
/
கடப்பாக்கம் பயணியர் நிழற்குடை ரூ.8 லட்சத்தில் கட்டுமான பணி
கடப்பாக்கம் பயணியர் நிழற்குடை ரூ.8 லட்சத்தில் கட்டுமான பணி
கடப்பாக்கம் பயணியர் நிழற்குடை ரூ.8 லட்சத்தில் கட்டுமான பணி
ADDED : செப் 28, 2024 12:30 AM

செய்யூர்:இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட கடப்பாக்கம் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது.
இங்கு, கடப்பாக்கம், வேம்பனுார், விளம்பூர், கப்பிவாக்கம், சேம்புலிபுரம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுராந்தகம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் புதுச்சேரி போன்ற பல்வேறு வெளியூர்களுக்கு பயன்படுத்துகின்றனர்.
அங்கு, பேருந்து நிறுத்த நிழற்குடை சேதமடைந்து, இருக்கைகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், செய்யூர் சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சில நாட்களுக்கு முன் பழைய நிழற்குடை அகற்றப்பட்டு, புதிய நிழற்குடை அமைப்பதற்கான கட்டுமானப் பணி நடந்து வருகிறது.