/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை புறநகர் பஸ் நிலையம் கட்டுமான பணிகள் மந்தம்
/
செங்கை புறநகர் பஸ் நிலையம் கட்டுமான பணிகள் மந்தம்
செங்கை புறநகர் பஸ் நிலையம் கட்டுமான பணிகள் மந்தம்
செங்கை புறநகர் பஸ் நிலையம் கட்டுமான பணிகள் மந்தம்
ADDED : டிச 22, 2025 04:23 AM
செங்கல்பட்டு: மலையடி வேண்பாக்கத்தில், செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாக, சமூக ஆர்வலர் கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
செங்கல்பட்டு நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க பேருந்து நிலையம், அரசு போக்குவரத்து கழக பணிமனை ஆகிய வற்றை, நகருக்கு வெளியே அமைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது.
இதைத்தொடர்ந்து, ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மலையடி வேண்பாக்கம் கிராமத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிக்கு சொந்தமான 9.95 ஏக்கர் நிலத்தில், செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இப்பணியை மேற்கொள்ளும் பொறுப்பு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன் பின், 130 கோடி ரூபாயில், செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையம் அமைக்க, 'டெண்டர்' விடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மலையடி வேண்பாக்கம் கிராமத்தில், செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலைய பணிக்கு, முதல்வர் ஸ்டாலின் 2023 நவ., 15ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார்.
தற்போது, கட்டுமான பணிகள் 70 சதவீதம் முடிந்துள்ளன. அனைத்து பணிகளும் முடிந்து, வரும் டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கூறப்பட்டது.
ஆனால், தற்போது பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. எனவே, செங்கல்பட்டு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, புறநகர் பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

