கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளி கீழே விழுந்து பலி
கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளி கீழே விழுந்து பலி
ADDED : பிப் 28, 2026 05:54 AM
அ நிறம் | அளவு
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே படாளம் அடுத்த மெய்யூரில் உள்ள கோவிலில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தவர், சாரத்தில் இருந்து கீழே விழுந்ததில் பலியானார்.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார், 28. இவர், படாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மெய்யூர் கிராமத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், கட்டட வேலையில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று கோவில் ராஜகோபுரத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது சாரத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்சில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
