/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கட்டுமான தொழிலாளர்கள் செங்கையில் ஆர்ப்பாட்டம்
/
கட்டுமான தொழிலாளர்கள் செங்கையில் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 17, 2025 05:54 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில், பொங்கல் தொகுப்புடன் 5,000 ரூபாய் வழங்கக் கோரி, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
செங்கல்பட்டு எம்.ஜி.ஆர்., மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் அருகில், மாவட்ட தலைவர் பாபு தலைமையில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில துணைத் தலைவர் மாலதி உள்ளிட்ட பலர் பேசினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய தொழிலாளர் 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு, பொங்கல் தொகுப்புடன் 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.
தற்போது வழங்கி வரும் நலவாரிய உதவித்தொகையை இரட்டிப்பாக்கி வழங்கவும், வீடு கட்டும் திட்டத்திற்கு விண்ணப்பித்த அனைவருக்கும் வீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

