/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாசு கலந்த குடிநீர் சப்ளை 13 பேருக்கு வயிற்றுப்போக்கு
/
மாசு கலந்த குடிநீர் சப்ளை 13 பேருக்கு வயிற்றுப்போக்கு
மாசு கலந்த குடிநீர் சப்ளை 13 பேருக்கு வயிற்றுப்போக்கு
மாசு கலந்த குடிநீர் சப்ளை 13 பேருக்கு வயிற்றுப்போக்கு
ADDED : அக் 22, 2024 07:45 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, பரந்துார் ஊராட்சியில், நாகப்பட்டு துணை கிராமம் உள்ளது. இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மேல் மூடி இல்லாமல் திறந்த நிலையில் இருந்துள்ளது.
தொடர் மழை பெய்து வருவதால், மழைநீர், குடிநீருடன் கலந்து மாசு ஏற்படுத்தி உள்ளது. இந்த தண்ணீரை குடித்த சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் ஐந்து பேர் உள் நோயாளிகளாகவும் மற்றும் எட்டு பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
தகவல் அறிந்த, வாலாஜாபாத் வட்டார மருத்துவக் குழுவினர், நேற்று நாகப்பட்டு கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி, வயிற்றுப்போக்கு மருத்து, மாத்திரைகளை வழங்கினர்.