/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரத்தில் கட்டுப்பாட்டு மையம் திறப்பு
/
தாம்பரத்தில் கட்டுப்பாட்டு மையம் திறப்பு
ADDED : நவ 22, 2024 08:13 PM
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியில், 'தாம்பரத்தின் குரல்' என்ற செயலி வாயிலாக, பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை கண்டறிய, 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குப்பை அகற்றும் வாகனங்கள், சி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பணிகளை, மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில், 60 லட்சம் ரூபாயில், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, நேற்று திறந்து வைத்து, கண்காணிப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். மேலும், 15 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்ட, நாய் பிடிக்கும் வாகனத்தையும், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

