/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மண் திருடப்படுவதை தட்டிக்கேட்ட கவுன்சிலர் கணவருக்கு அடி, உதை
/
மண் திருடப்படுவதை தட்டிக்கேட்ட கவுன்சிலர் கணவருக்கு அடி, உதை
மண் திருடப்படுவதை தட்டிக்கேட்ட கவுன்சிலர் கணவருக்கு அடி, உதை
மண் திருடப்படுவதை தட்டிக்கேட்ட கவுன்சிலர் கணவருக்கு அடி, உதை
ADDED : செப் 04, 2025 09:48 PM
செங்கல்பட்டு:அஞ்சூர் கிராமத்தில், துார்வாரப்படும் குளத்தில் இருந்து மண் திருடப்படுவதை தட்டிக் கேட்ட, வார்டு கவுன்சிலரின் கணவர் தாக்கப்பட்டது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், அஞ்சூர் ஊராட்சியில், கொல்லைமேடு குளம் உள்ளது. இந்த குளம், ஊராட்சி பொது நிதியிலிருந்து, 33 லட்சம் ரூபாயில் துார்வாரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில், குளத்தில் இருந்து செம்மண் எடுக்கப்பட்டு, லாரிகளில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதைப் பார்த்த அஞ்சூர் ஊராட்சி, எட்டாவது வார்டு கவுன்சிலர் உமா மகேஸ்வரியின் கணவரும், தி.மு.க., உறுப்பினருமான கணேசன், 41, லாரியை தடுத்து நிறுத்தி, இதுகுறித்து கேட்டுள்ளார் .
அப்போது அங்கு வந்த, அஞ்சூர் ஊராட்சி துணைத் தலைவர் நித்யானந்தம் என்பவர், கணேசனை அடித்து உதைத்ததில், அவருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தோர் கணேசனை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து வார்டு கவுன்சிலர் உமா மகேஸ்வரி, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கணேசன் தாக்கிய தாக நித்யானந்தம் தரப்பிலும், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
இரு புகார்கள் குறித்தும், போலீசார் விசாரிக்கின்றனர்.