/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செயல் அலுவலர் நியமிக்க கோரி கவுன்சிலர் கூட்டம் புறக்கணிப்பு
/
செயல் அலுவலர் நியமிக்க கோரி கவுன்சிலர் கூட்டம் புறக்கணிப்பு
செயல் அலுவலர் நியமிக்க கோரி கவுன்சிலர் கூட்டம் புறக்கணிப்பு
செயல் அலுவலர் நியமிக்க கோரி கவுன்சிலர் கூட்டம் புறக்கணிப்பு
ADDED : மார் 28, 2025 08:46 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு செயல் அலுவலர் நியமிக்க கோரி, கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணிப்பு செய்தனர்.
அச்சிறுபாக்கம் பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது.
இந்த பேரூராட்சியில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, செயல் அலுவலரின்றி செயல்பட்டு வருகிறது.
தற்காலிகமாக, கருங்குழி பேரூராட்சியில் பணியாற்றும் செயல் அலுவலர் அருள்குமார், அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் பொறுப்பு செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார்.
பணி நாட்களில் மூன்று நாட்கள், அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு வந்து செல்கிறார்.
இதனால், அடிப்படை தேவைகள் குறித்து மனு அளிக்க வரும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், பேரூராட்சி பணிகளும் பாதிக்கப்படுகின்றன.
பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் பாதிக்கப்படுவதாகவும், வளர்ச்சிப் பணிகளுக்கு ஒப்புதல் பெறுவதற்கும், முடிவற்ற பணிகளுக்கு கையெழுத்து வாங்கவும், அதிகாரியை தேடி அலைந்து அலைச்சல் ஏற்படுவதாக கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று, அச்சிறுபாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், கவுன்சிலர் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு செயல் அலுவலரை நியமிக்க கோரி தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள், கூட்டத்தை புறக்கணிப்பு செய்தனர்.
எனவே, அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு செயல் அலுவலர் நியமிக்க, பேரூராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேரூராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

