/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அனுமதி பெறாத விளம்பர பேனர்கள் அதிகரிப்பு தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
/
அனுமதி பெறாத விளம்பர பேனர்கள் அதிகரிப்பு தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
அனுமதி பெறாத விளம்பர பேனர்கள் அதிகரிப்பு தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
அனுமதி பெறாத விளம்பர பேனர்கள் அதிகரிப்பு தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
ADDED : ஏப் 29, 2025 12:17 AM
தாம்பரம், ஏப். 29-
தாம்பரம் மாநகராட்சி கூட்டம், மேயர் வசந்தகுமாரி தலைமையில் நேற்று நடந்தது. இதில், துணை மேயர் காமராஜ், கமிஷனர் பாலச்சந்தர் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வரி உயர்வு தொடர்பாக கவுன்சிலர்கள் பேசிய போது, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் கடன் வாங்குவதற்காக வரி உயர்வை ஏற்றிவிட்டனர் என, தி.மு.க., கவுன்சிலர்கள் கூறினர்.
அதற்கு, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
பாலச்சந்தர், கமிஷனர்: கடந்த கூட்டத்தில், 71 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. சில திட்டங்களுக்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. பல்லாவரத்தில், ஐந்து வார்டுகளில், 24 மணி நேரம் குடிநீர் வினியோக திட்டம் நடந்து வருகிறது.
புஷிராபானு, 26வது வார்டு, ம.தி.மு.க., கவுன்சிலர்: வார்டில் அனைத்து தெருக்களும் குண்டும், குழியுமாக உள்ளன. பள்ளம் உள்ள இடங்களை சீரமைக்க வேண்டும்.
விஜயலட்சுமி, 28வது வார்டு, மார்க்சிஸ்ட்: கொசு ஒழிப்பு பணியாளர்கள், 60 பேர் பணிபுரிவதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 15 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகின்றனர். வாரத்திற்கு ஒரு முறை வரவேண்டும்.
காமராஜ், 4வது மண்டலகுழு தலைவர்: மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள அலங்கார விளக்குகளால், பெருங்களத்துார் மேம்பாலம் ஜொலிக்கிறது.
ஆனால், அங்குள்ள ஒவ்வொரு கம்பத்திலும் விளம்பர தட்டிகளை மாட்டியுள்ளனர். இது, பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல், மாநகராட்சி சார்பில் வரையப்பட்டுள்ள ஓவியங்களிலும், அத்துமீறி போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.
விதிமுறையை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர தட்டிகளை அகற்றுவதோடு, அதை வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாமோதரன், 45வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர்: தாம்பரம் - வேளச்சேரி சாலையில், ராட்சத விளம்பர பேனர்கள் வைப்பது அதிகரித்துள்ளது. சேலையூரில் மட்டும் கட்டடங்களின் மேல், 18 பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற வேண்டும்.
கருணாநிதி, 1வது மண்டல குழு தலைவர்: பம்மல், அனகாபுத்துார் பகுதி தாழ்வான பகுதியாகும். மழை காலத்தில் இப்பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்படுகின்றன. வரும் மழை காலத்தை கருத்தில் கொண்டு, போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.