/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் திரிந்த மாடுகள் பறிமுதல்
/
சாலையில் திரிந்த மாடுகள் பறிமுதல்
ADDED : ஆக 02, 2025 11:03 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து, மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. நகரில், ஜி.எஸ்.டி., சாலை, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் உள்ளன. செங்கல்பட்டு நகரில், சாலைகளில் மாடுகள் சுற்றிதிரியும்போது, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க, நகராட்சி நிர்வாகத்திற்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, நகரில் மாடுகள் வளர்ப்பவர்களிடம், மாடுகள் சாலையில் சுற்றித்திரிந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்து அவகாசம் வழங்கியது.
தொடர்ந்து சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தது. நகராட்சி சுகாதார அலுவலர் தலைமையிலான குழுவினர், சாலையில் சுற்றித்திரிந்த மூன்று மாடுகள், 5 கன்று குட்டிகளை, நேற்றுமுன்தினம், பிடித்து, உரிமையாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.