/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் உலா வரும் மாடுகள் அச்சிறுபாக்கத்தில் விபத்து அபாயம்
/
சாலையில் உலா வரும் மாடுகள் அச்சிறுபாக்கத்தில் விபத்து அபாயம்
சாலையில் உலா வரும் மாடுகள் அச்சிறுபாக்கத்தில் விபத்து அபாயம்
சாலையில் உலா வரும் மாடுகள் அச்சிறுபாக்கத்தில் விபத்து அபாயம்
ADDED : டிச 04, 2025 02:40 AM

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் பகுதியில், சாலையில் உலா வரும் மாடுகளால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணம் செய்து வருகின்றனர்.
அச்சிறுபாக்கம் பகுதியில் சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து எலப்பாக்கம், திம்மாபுரம், திருமுக்காடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் பெறும் வகையில், சாலையில் உயர் மட்ட பாலம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இப்பகுதி சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.
குறிப்பாக, அச்சிறுபாக்கம் மார்வர் மேல்நிலைப் பள்ளி, எலப்பாக்கம் சாலை, பஜார் வீதி, ஜி.எஸ்.டி., சாலை போன்ற இடங்களில் தாறுமாறாக ஓடும் மாடுகள், திடீரென வாகனங்கள் மீது மோதுகின்றன.
இப்பகுதியில் தெருவிளக்குகளும் சரியாக ஒளிராத நிலையில், மாடுகள் வருவது தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட, தேசிய நெடுஞ் சாலைத்துறை மற்றும் அச்சிறுபாக்கம் பேரூராட்சி அதிகாரிகள் கவனித்து, மாடுகளின் உரிமையாளர்களை அழைத்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், கால்நடை வளர்ப்பில் ஈடுபட அறிவுறுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

