ரூ.300 வழிப்பறி ரவுடிகள் கைது
திருவொற்றியூர், அக். 28--
திருவொற்றியூர், பட்டினத்தார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மேத்யூ, 25; கூலி தொழிலாளி. கடந்த 25ம் தேதி மாட்டுமந்தை மேம்பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது, வழிமறித்த மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, 300 ரூபாய் பறித்து சென்றனர்.
இது குறித்து விசாரித்த திருவொற்றியூர் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட திருவொற்றியூரைச் சேர்ந்த அகில், 31, இம்ரான், 26, ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர். இருவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன.
4 ஆட்டோ கண்ணாடி உடைப்பு
சென்னை, அக். 28--
புளியந்தோப்பு, நரசிம்மன் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 45. ஆட்டோ ஓட்டுநர். இவரது ஆட்டோ மற்றும் நண்பர்களான இளங்கோவன், அசோக், சிராஜ் ஆகியோரது ஆட்டோக்களும் நேற்று முன்தினம் இரவு, நரசிம்மன் நகர் 2வது தெருவில் நிறுத்தப்பட்டிருந்தக.
நேற்று காலை 10:00 மணியளவில் வந்து பார்த்தபோது, நான்கு ஆட்டோக்களின் முன்பக்க கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்து சென்றுள்ளனர். இது குறித்து பேசின்பாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

