/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தி.மு.க., நிர்வாகி கொலையில் 4 பேருக்கு காவல் நீட்டிப்பு
/
தி.மு.க., நிர்வாகி கொலையில் 4 பேருக்கு காவல் நீட்டிப்பு
தி.மு.க., நிர்வாகி கொலையில் 4 பேருக்கு காவல் நீட்டிப்பு
தி.மு.க., நிர்வாகி கொலையில் 4 பேருக்கு காவல் நீட்டிப்பு
ADDED : மார் 07, 2024 11:29 AM
செங்கல்பட்டு:சென்னை அடுத்த வண்டலுார் வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆராவமுதன், 56.
இவர், தி.மு.க., காட்டாங்கொளத்துார் வடக்கு ஒன்றிய செயலர் மற்றும் காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர்.
கடந்த பிப்., 29ம் தேதி வண்டலுார் மேம்பாலத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி, மர்ம கும்பல் இவரை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.
இதுகுறித்து, ஓட்டேரி போலீசார் விசாரித்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து, கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த கனகராஜ், 38, அருண்ராஜ், 34, திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், 32, மணிகண்டன், 26, ஆகியோர், ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தில், 4ம் தேதி சரணடைந்தனர்.
அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்பின், நான்கு பேரையும் மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து, மதுரை மத்திய சிறையில் இருந்த நான்கு பேரையும், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் - 2ல், நேற்று ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து, இவர்களை நான்கு பேரையும் 18ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்ட சிறையில் போலீசார் அடைத்தனர்.

