/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை செங்கையில் ஏற்பாடுகள் தயார் கலெக்டர் தகவல்
/
புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை செங்கையில் ஏற்பாடுகள் தயார் கலெக்டர் தகவல்
புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை செங்கையில் ஏற்பாடுகள் தயார் கலெக்டர் தகவல்
புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை செங்கையில் ஏற்பாடுகள் தயார் கலெக்டர் தகவல்
ADDED : நவ 30, 2024 12:48 AM

மாமல்லபுரம், நவ. 30-
செங்கல்பட்டு மாவட்டத்தில் புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தயார் நிலையில் இருப்பதாக, கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்தார்.
புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை, மாமல்லபுரத்தில் நேற்று அவர் ஆய்வு செய்தார். கடற்கரை கோவில் அருகில், மாமல்லபுரம் தீயணைப்பு படையினர், பேரிடர் கால பயன்பாட்டு சாதனங்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.
அவற்றை, சப் - கலெக்டர் நாராயணசர்மா மற்றும் பிற துறையினருடன், கலெக்டர் பார்வையிட்டார். அவற்றின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். கடல் சீற்றத்தை பார்வையிட்டு, மீனவ படகுகள், கடற்கரையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில், மழைநீர் சூழும் தாழ்வான பகுதிகளாக, 390 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பாதிப்பு பகுதி மக்களை தங்கவைக்க, 290 நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அங்கு தங்குவோருக்கு, உணவு, பால், பிஸ்கட், போர்வை வழங்கப்படும். வருவாய், உள்ளாட்சி, காவல், தீயணைப்பு உள்ளிட்ட துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தி உள்ளோம்.
மீனவர்கள், கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி, கடலுக்கு செல்லாதவாறு கண்காணிக்கிறோம். மின்சாரம் துண்டிக்கப்பட்டால், உடனடி இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதிப்பு ஏற்பட்டால், பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது வாட்ஸாப் எண்ணில் தெரிவிக்க, தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் இருளர்களை தங்கவைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் வரை, சுற்றுலா பயணியர் மாமல்லபுரத்தில் இருக்கவேண்டாம். புயல் கடந்த பின், சிற்பங்களை பார்வையிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

