/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நீர் வழித்தடத்தில் குப்பை கொட்டி தீயிட்டு எரிப்பதால் பாதிப்பு
/
நீர் வழித்தடத்தில் குப்பை கொட்டி தீயிட்டு எரிப்பதால் பாதிப்பு
நீர் வழித்தடத்தில் குப்பை கொட்டி தீயிட்டு எரிப்பதால் பாதிப்பு
நீர் வழித்தடத்தில் குப்பை கொட்டி தீயிட்டு எரிப்பதால் பாதிப்பு
ADDED : ஆக 09, 2025 01:31 AM

மறைமலை நகர்:கருநிலம் ஊராட்சியில், நீர் வழித்தடத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டி எரிக்கப்படுவதால், கிராமத்தினர் அவதியடைந்து வருகின்றனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கருநிலம் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவர், கருநிலம் கிராம எல்லைக்கும் மருதேரி கிராமத்திற்கும் இடையே உள்ள நீர் வழித்தடத்தில், தொடர்ந்து தொழிற்சாலை கழிவு மற்றும் மருத்துவ கழிவுகளை கொட்டி எரித்து வருவதாக, கிராமத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து கருநிலம் கிராமத்தினர் கூறியதாவது:
நீர் வழித்தடத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டி எரிக்கப்படுவதால் நீர்நிலைகள், விவசாய நிலங்கள், வனப்பகுதி உள்ளிட்டவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
தொடர்ந்து எரிக்கப்படும் குப்பையின் கரும்புகை காற்றில் பரவி, கிராமத்தில் உள்ளவர்களுக்கு சுவாச பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது.
மருதேரி கிராமம் திருப்போரூர் ஒன்றியத்திலும், கருநிலம் காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திலும் உள்ளதால், யார் நடவடிக்கை எடுப்பது என்பதில் அதிகாரிகளுக்கிடையே, போட்டா போட்டி நீடிக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குப்பை கொட்டப்படுவதையும், எரிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.