/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதம்
/
திருப்போரூர் சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதம்
திருப்போரூர் சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதம்
திருப்போரூர் சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதம்
ADDED : ஏப் 09, 2025 01:43 AM

திருப்போரூர்:திருப்போரூரில் உள்ள சிறுவர் பூங்காவில், சேதமடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்போரூர் பேரூராட்சி, திருவஞ்சாவடி தெரு, 7வது வார்டில், சில ஆண்டுகளுக்கு முன் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.
இந்த சிறுவர் பூங்காவில், 5 வயது முதல், 15 வயது வரையிலான சிறுவர்கள் விளையாடுவதற்காக, பல்வேறு வகையான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டன.
மேலும் பூங்காவில், சுற்றுச்சுவருடன் தடுப்புக் கம்பிகள் மற்றும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள், தற்போது உடைந்துள்ளன. மின் விளக்குகளும் சேதமடைந்து உள்ளன.
விடுமுறை மற்றும் மாலை நேரங்களில், சிறுவர்கள் அதிகமாக இந்த பூங்காவிற்கு வருகின்றனர். விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து உள்ளதால், அவற்றை பயன்படுத்த முடியாமல் ஏமாற்றமடைகின்றனர்.
மின்விளக்குகளும் சேதமடைந்து எரியாமல் உள்ளதால், இரவில் இந்த பூங்கா, சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி வருகிறது.
எனவே, சேதமடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை சரி செய்து, மின்விளக்குகள் அமைத்து, பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

