/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலம் துார்ந்து சரிந்ததால் பாசன கால்வாய்க்கு பாதிப்பு
/
பாலம் துார்ந்து சரிந்ததால் பாசன கால்வாய்க்கு பாதிப்பு
பாலம் துார்ந்து சரிந்ததால் பாசன கால்வாய்க்கு பாதிப்பு
பாலம் துார்ந்து சரிந்ததால் பாசன கால்வாய்க்கு பாதிப்பு
ADDED : ஜன 30, 2024 04:38 AM

மதுராந்தகம் : மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்டது, கிணார் ஊராட்சி. இந்த கிணார் ஊராட்சிக்கு உட்பட்டு ஏர்பாக்கம், இருசாமநல்லுார் உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளன.
இதில், இருசாமநல்லுார் பகுதி வழியாக வீராணம் ஏரியிலிருந்து, சென்னைக்கு குடிநீர் செல்லும், குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
இந்த வீராணம் குழாயை ஒட்டியுள்ள சாலையில், கடந்த ஐந்து மாதத்திற்கு முன், புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலை பணி நடைபெற்ற போது, ஏரியிலிருந்து விவசாய நிலங்களுக்கு பாசன நீர் செல்லும் கால்வாயில் அமைக்கப்பட்டிருந்த பாலம் துார்ந்து போனது.
இதையடுத்து, ஏரி பாசன கால்வாய் வழியாக நீர் சென்று, விவசாயம் நடைபெற வேண்டிய 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் விவசாயிகள், கிணற்று பாசனம் வாயிலாக பைப் அமைத்து, தண்ணீர் கொண்டு சென்று விவசாயம் செய்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பாலம் அமைக்கப்பட்டிருந்த பகுதியில், புதிதாக பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.