/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமான சாலை: நெடுமரம் மக்கள் அவதி
/
சேதமான சாலை: நெடுமரம் மக்கள் அவதி
ADDED : நவ 09, 2025 05:12 AM

கூவத்துார்: நெடுமரம் ஊராட்சியில் சாலை சேதமடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளதால், கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கூவத்துார் அடுத்த நெடுமரம் ஊராட்சியில், 800க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகாலனி பள்ளிக்கூடத்தெரு, நேதாஜி தெரு, பெரியார் தெரு; சின்னகாலனியில் மாரியம்மன்கோவில் தெரு, கெங்கையம்மன் கோவில் தெரு உள்ளிட்ட தெருக்களில், 25 ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலைகள் 15 ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து, சகதியாக மாறிவிட்டதால், நடந்து செல்லும் பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, நெடுமரம் கிராம மக்கள் கூறுகையில், 'சாலையை சீரமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரி வருகிறோம். ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, நெடுமரம் ஊராட்சியில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

