/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆபத்தான முறையில் கட்டுமான பணி கூடுவாஞ்சேரி அருகே விபத்து அபாயம்
/
ஆபத்தான முறையில் கட்டுமான பணி கூடுவாஞ்சேரி அருகே விபத்து அபாயம்
ஆபத்தான முறையில் கட்டுமான பணி கூடுவாஞ்சேரி அருகே விபத்து அபாயம்
ஆபத்தான முறையில் கட்டுமான பணி கூடுவாஞ்சேரி அருகே விபத்து அபாயம்
ADDED : டிச 14, 2024 01:23 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரியிலுள்ள விஸ்வநாதபுரத்தில் குழந்தைகள் மையம் மற்றும் தனியார் பள்ளிகள் அதிகம் உள்ளன. இங்குள்ள பள்ளியின் எதிரிலுள்ள ஒரு வீட்டை இடித்துவிட்டு, அடுக்குமாடி வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
உரிய பாதுகாப்பின்றி கட்டுமானம் நடைபெறும் இங்கு, பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு, திறந்த நிலையில் உள்ளது. இந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி, கிணறு போல் காட்சியளிக்கிறது.
இந்த தெருவில் எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று வழிவிடும் போது, மண் சரிந்து இந்த பள்ளத்திற்குள் வாகனங்கள் கவிழ்ந்து, விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
மேலும், இந்த சாலையில் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் நடந்த செல்வதால், எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
விஸ்வநாதபுரத்தில், பள்ளிகள் மற்றும் குழந்தைகள் மையம் செயல்படும் இந்த சாலையில், தினமும்1,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சென்று வருகின்றனர். பள்ளியின் அருகில் அடுக்குமாடி கட்டடம் கட்டும் கட்டுமான நிறுவனம் ஒன்று, திறந்தவெளியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் கட்டுமான பணியை செய்து வருகிறது.
கட்டுமான பணிக்காக தோண்டிய பள்ளத்தில் தண்ணீர் தேங்கி, அச்சம் நிலவுகிறது. எனவே, சாலையோரம் தடுப்புகள் அமைத்து, பாதுகாப்பு வசதியுடன் கட்டடம் கட்ட, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

