/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாக்கம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் சுகாதார சீர்கேடு
/
பாக்கம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் சுகாதார சீர்கேடு
பாக்கம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் சுகாதார சீர்கேடு
பாக்கம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூன் 13, 2025 02:09 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே பாக்கம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசுவதால், அவற்றை அகற்ற வேண்டுமென பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாக்கம் ஊராட்சியில், 400 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில், பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது.
தற்போது இந்த ஏரியில், கடந்த இரண்டு நாட்களாக ஜிலேபி மற்றும் கெண்டை மீன்கள், செத்து மிதக்கின்றன.
இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால், ஏரிக்கரை மீது உள்ள சாலையை பயன்படுத்தும் தாதங்குப்பம், புளிக்கொறடு, வசந்தவாடி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமத்தினர் சிரமப்படுகின்றனர்.
மேலும், பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் குடிநீர் கிணறு, இந்த ஏரியில் உள்ளதால், நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்து, செத்து மிதக்கும் மீன்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.