/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'போக்சோ' கவுன்சிலிங் மையம் தாம்பரம் முழுதும் விரிவாக்க முடிவு
/
'போக்சோ' கவுன்சிலிங் மையம் தாம்பரம் முழுதும் விரிவாக்க முடிவு
'போக்சோ' கவுன்சிலிங் மையம் தாம்பரம் முழுதும் விரிவாக்க முடிவு
'போக்சோ' கவுன்சிலிங் மையம் தாம்பரம் முழுதும் விரிவாக்க முடிவு
ADDED : ஜூலை 29, 2025 11:41 PM
சென்னை,பெரும்பாக்கத்தில், காவல் துறை துவங்கிய, போக்சோ கவுன்சிலிங் மையம் பெரும் வரவேற்பை பெற்றதால், தாம்பரம் கமிஷனரக எல்லை முழுதும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் முதல் முறையாக, தாம்பரம் காவல் கமிஷனரகம் சார்பில், சென்னை பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகம், 30வது பிளாக்கில், 'தளராத தளிர்கள்' என்ற கவுன்சிலிங் மையம் சமீபத்தில் திறக்கப்பட்டது.
இங்கு, கவுன்சிலிங் வழங்க மூன்று பேர் உள்ளனர். திறந்த பின், அதிக வரவேற்பை பெற்றதால், இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, தாம்பரம் போலீஸ் கமிஷனரகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பெரும்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரி பகுதிகளில் பெண்கள், குழந்தைகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால், போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதிவாகின்றன.
அதனால், போக்சோ குற்றங்களை தடுக்கும் வகையில், குழந்தைகள், பெண்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்குகிறோம். மையம் துவங்கிய ஒரு மாதத்தில், இப்பகுதியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
தாம்பரம் கமிஷனரக எல்லையில் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில், மையத்தை மேம்படுத்தி வருகிறோம்.
கூடுதலாக, வேறு இடங்களில் ஆரம்பிக்கலாமா எனவும் ஆலோசித்து வருகிறோம். பாலியல் சார்ந்த பிரச்னையில் சிக்கியவர்களுக்கு, உரிய வழிகாட்டுதல், பாதுகாப்பு, சட்ட வழிமுறைகள் வழங்கப்படும்.
இதற்கு, பள்ளி, கல்லுாரி நிர்வாகங்கள் மையத்தை அணுகலாம். ஆண்களிடம் இருந்து தற்காத்து கொள்ளவும் ஆலோசனை வழங்குகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

