/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'சிட்கோ' சிற்பக்கலை பூங்கா மறுவடிவமைக்க முடிவு
/
'சிட்கோ' சிற்பக்கலை பூங்கா மறுவடிவமைக்க முடிவு
ADDED : நவ 19, 2025 05:08 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் ஏராளமான தனியார் சிற்பக்கூடங்கள் உள்ளன. கற்சிற்பத் தொழிலில், மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
இத்தொழில் மேம்பாடு கருதி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின்கீழ், 'சிட்கோ' சிற்பக்கலை பூங்கா அமைக்க, தமிழக அரசு முடிவெடுத்தது.
இதுகுறித்து கடந்த 2021ல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி பகுதியில், 21.07 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் கடந்தும் துவக்கப்படாதது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து, சிட்கோ நிறுவனம், 15.39 கோடி ரூபாய் மதிப்பில், 111 தொழில்மனைகள் ஏற்படுத்த முடிவெடுத்தது. முதல்கட்டமாக, தற்போது 11.73 ஏக்கர் பரப்பில், 66 தொழில்மனைகள் ஏற்படுத்தப்பட்டன. அங்கு சாலைகள் அமைப்பது உள்ளிட்ட முதல்கட்ட பணிகள் 4.44 கோடி ரூபாய் மதிப்பில் துவக்கப்பட்டு, கடந்த செப்., 16ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கினார். ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெற்று, தொழில்மனை ஒதுக்கப்படும் என, சிற்பக்கூட உரிமையாளர்களிடம் சிட்கோ நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், மூன்று மாதங்கள் கடந்தும் விண்ண ப்பம் பெறப்படவில்லை.
இதுகுறித்து, சிட்கோ நிறுவன அலுவலர் ஒருவர் கூறியதாவது:
கடம்பாடி சிற்பக்கலை பூங்காவை, ஐ.ஐ.டி., நிறுவனம் மூலமே வடிவமைத்தோம். தற்போது சி.ஆர்.எஸ்., விதிகளின்படி, மறுவடிவமைப்பிற்காக, அதே நிறுவனத்திடம் அணுகியுள்ளோம்.
வடிவமைப்பு முடிந்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் .
இவ்வாறு, அவர் கூறினார்.

