/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விடுமுறை நாட்களில் மாமல்லைக்கு கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்
/
விடுமுறை நாட்களில் மாமல்லைக்கு கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்
விடுமுறை நாட்களில் மாமல்லைக்கு கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்
விடுமுறை நாட்களில் மாமல்லைக்கு கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்
ADDED : நவ 24, 2024 07:51 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள் உள்ளிட்ட பல்லவர் கால சிற்பங்களை காண, சுற்றுலா பயணியர் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றனர்.
சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதி பயணியர், வார இறுதி, அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், இங்கு படையெடுப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், போதிய அளவு அரசு பேருந்துகள் இயக்கப்படாததால், சுற்றுலா பயணியர் தவிக்கின்றனர்.
செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரத்திற்கு, தடம் எண் 508 அரசு பேருந்து, திருவான்மியூரிலிருந்து மாமல்லபுரத்திற்கு, தடம் எண் 588 மாநகர் பேருந்து, தாம்பரத்திலிருந்து மாமல்லபுரத்திற்கு, தடம் எண் 515 ஆகிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வார இறுதி உள்ளிட்ட நாட்களில், இப்பகுதிக்கு வழக்கமான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. குறைவான பேருந்துகளில், பயணியர் நெருக்கியடித்து வருகின்றனர்.
சிற்பங்களை கண்டு, ஊர் திரும்புவதற்காக போதிய பேருந்துகள் இல்லாததால், பேருந்து நிலையத்தில் நீண்டநேரம் காத்திருக்கின்றனர். பயணியர் நலன் கருதி, விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.