/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெரும்பாக்கம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு புதிதாக கிணறு அமைக்க கோரிக்கை
/
பெரும்பாக்கம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு புதிதாக கிணறு அமைக்க கோரிக்கை
பெரும்பாக்கம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு புதிதாக கிணறு அமைக்க கோரிக்கை
பெரும்பாக்கம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு புதிதாக கிணறு அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 23, 2025 01:33 AM

மதுராந்தகம்:பெரும்பாக்கம் ஊராட்சியில், குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், புதிதாக குடிநீர் கிணறு அமைக்க வேண்டுமென, அங்கு வசிப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியம், பெரும் பாக்கம் காலனி பகுதியில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் .
இவர்களுக்கு குடிநீர் வழங்க, பெரும்பாக்கத்தில் உள்ள பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான ஏரிக்கரை அருகே, ஐந்து ஆண்டுகளுக்கு முன் குடிநீர் கிணறு தோண்டப்பட்டு, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.
இங் கு மின்மோட்டார் அமைத்து, கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீ ர் ஏ ற்றப்பட்டு, குழாய் மூல மாக , அங்கு வசிப்போருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்தாண்டு பெய்த மழையின் காரணமாக ஏரியில் நீர் நிரம்பியதால், இந்த குடிநீர் கிணற்றை சுற்றி இ ருந்த சுற்றுச்சுவர் இடிந் து கிணற்றுக்குள் விழுந்து, தண்ணீர் அசுத்தமானது.
இதனால், பெரும்பாக்கம் காலனி பகுதியில் உள்ள மதுரை வீரன் கோவில் தெரு, அம்பேத்கர் தெரு, காமராஜர் தெரு மற்றும் நடுத்தெரு பகுதியில் வசிப்போருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு, குடிநீர் ஏற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில், மற்ற குடிநீர் கிணறுகளில் இருந்தும், ஆழ்துளைக் கிணற்றில் இருந்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதால், புதிதாக குடிநீர் கிணறு அமைக்க வேண்டு மென, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு, அங்கு வசிப்போர் மனு அளித்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, பெரும்பாக்கத்தில் புதிதாக குடிநீர் கிணறு அமைத்து, அங்கு வசிப்போருக்கு குடிநீர் வினியோகம் செய்ய கலெக்டர், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெ ன, இப்பகுதியில் வசிப்போர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.