/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திம்மாபுரத்தில் குடிநீர் பற்றாக்குறை புது கிணறு அமைக்க கோரிக்கை
/
திம்மாபுரத்தில் குடிநீர் பற்றாக்குறை புது கிணறு அமைக்க கோரிக்கை
திம்மாபுரத்தில் குடிநீர் பற்றாக்குறை புது கிணறு அமைக்க கோரிக்கை
திம்மாபுரத்தில் குடிநீர் பற்றாக்குறை புது கிணறு அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 07, 2025 01:40 AM
அச்சிறுபாக்கம்:திம்மாபுரம் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதால், புதிதாக குடிநீர் கிணறு அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திம்மாபுரம் ஊராட்சியில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், மூன்று குடிநீர் கிணறுகள் அமைத்து, மின்மோட்டார் மூலமாக ஐந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நீர் ஏற்றி, குழாய்கள் மூலமாக மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, கடந்த சில ஆண்டுகளாக, கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணறுகளில், போதிய அளவு நிலத்தடி நீர் இல்லாததால், பற்றாக்குறை நிலவி வருகிறது.
எனவே, திம்மாபுரம் ஊராட்சியில் புதிதாக குடிநீர் கிணறு அமைக்க, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.