/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
30 ஆண்டுகளாக கழிவுநீர் கலப்பு ரங்கநாதபுரம் ஏரியை சுத்தப்படுத்த கோரிக்கை
/
30 ஆண்டுகளாக கழிவுநீர் கலப்பு ரங்கநாதபுரம் ஏரியை சுத்தப்படுத்த கோரிக்கை
30 ஆண்டுகளாக கழிவுநீர் கலப்பு ரங்கநாதபுரம் ஏரியை சுத்தப்படுத்த கோரிக்கை
30 ஆண்டுகளாக கழிவுநீர் கலப்பு ரங்கநாதபுரம் ஏரியை சுத்தப்படுத்த கோரிக்கை
ADDED : ஜன 30, 2024 03:50 AM

தாம்பரம் : மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. 65 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியைச் சுற்றி, 32, 50, ஆகிய வார்டுகள் உள்ளன.
சமீப ஆண்டுகள் வரை இந்த ஏரியை நம்பி சுற்றுப்புற பகுதிகளில் விவசாயம் நடந்தது. பின், நாளடைவில் விவசாய நிலங்கள் குடியிருப்புகளாக மாறியதால், நிலத்தடி நீர் மட்டத்திற்கு மட்டுமே ஏரி பயன்பட்டது.
தற்போது, மேற்கு தாம்பரம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், பேருந்து டிப்போ ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலந்து வருகிறது.
ஏரியில் 30 ஆண்டுகளாக கழிவுநீர் கலந்து வருவதால், தண்ணீரின் நிறம் பச்சையாக மாறியுள்ளது. ஏரியை ஒட்டியுள்ள பகுதியினருக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய், காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படுகிறது.
ஏரியை சுற்றியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீரும் கெட்டுவிட்டது. இதனால், ஏரிநீரை வெளியேற்றி, துார்வாரி ஆழப்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.
இது சம்பந்தமாக கலெக்டர், பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஏரியை கவனிக்காமல் விட்டால், மேற்கு தாம்பரம் பகுதி முழுதும் நிலத்தடி நீர் கெட்டுவிடும்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விஷயத்தில் தலையிட்டு, ஏரிநீரை வெளியேற்றி, துார்வாரி, ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.