/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் - எல்லையம்மன் கோவில் பஸ் கடப்பாக்கம் வரை நீட்டிக்க வலியுறுத்தல்
/
மதுராந்தகம் - எல்லையம்மன் கோவில் பஸ் கடப்பாக்கம் வரை நீட்டிக்க வலியுறுத்தல்
மதுராந்தகம் - எல்லையம்மன் கோவில் பஸ் கடப்பாக்கம் வரை நீட்டிக்க வலியுறுத்தல்
மதுராந்தகம் - எல்லையம்மன் கோவில் பஸ் கடப்பாக்கம் வரை நீட்டிக்க வலியுறுத்தல்
ADDED : மே 21, 2025 10:00 PM
செய்யூர்:மதுராந்தகத்தில் இருந்து எல்லையம்மன் கோவில் வரை இயக்கப்படும் அரசு பேருந்தை, கடப்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டும் என, சுற்றுப் பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.
செய்யூர் அடுத்த எல்லையம்மன் கோவிலுக்கு மதுராந்தகத்தில் இருந்து, தடம் எண் 'டி-7' அரசு பேருந்து இயக்கப்படுகிறது.
இது செய்யூர், சித்தாமூர், முதுகரை வழியாக, மதுராந்தகம் செல்கிறது.
இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் கல்வி, வேலை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக சித்தாமூர், மேல்மருவத்துார், மதுராந்தகம், செங்கல்பட்டு போன்ற பகுதிக்குச் சென்று வருகின்றனர்.
இப்பகுதியில் இருந்து செய்யூர் வழியாக மதுராந்தகத்திற்கு செல்ல, நேரடி பேருந்து வசதி இல்லை. தனியார் பேருந்து அல்லது ேஷர் ஆட்டோக்கள் வாயிலாக எல்லையம்மன் கோவில் சென்று, அங்கிருந்து மாற்றுப் பேருந்து வாயிலாக செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பண விரயம் மற்றும் கால விரயம் ஏற்படுவதால், கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தற்போது, செய்யூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்கப்பட உள்ளதால், அதிக அளவில் கல்லுாரி மாணவர்கள் வந்து செல்ல வாய்ப்பு உள்ளது.
எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி, தற்போது எல்லையம்மன் கோவில் வரை இயக்கப்படும் அரசு பேருந்தை, கடப்பாக்கம் மார்க்கெட் வரை நீட்டித்து இயக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.