/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாழாகி வரும் இரும்புக்கம்பிகள் பாதுகாப்பாக வைக்க கோரிக்கை
/
பாழாகி வரும் இரும்புக்கம்பிகள் பாதுகாப்பாக வைக்க கோரிக்கை
பாழாகி வரும் இரும்புக்கம்பிகள் பாதுகாப்பாக வைக்க கோரிக்கை
பாழாகி வரும் இரும்புக்கம்பிகள் பாதுகாப்பாக வைக்க கோரிக்கை
ADDED : பிப் 18, 2025 05:53 AM

அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம், 59 ஊராட்சிகளை உள்ளடக்கியது.
அனைவருக்கும் வீடு திட்டத்தில், ஊராட்சி பகுதிகளில் குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வாயிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் பணி வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி, ஊராட்சி பகுதிகளில் பயனாளிகள், வீடு கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களுக்கு, வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வாயிலாக இரும்புக் கம்பிகள், சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் தற்போது, பயனாளிகளுக்கு வழங்குவதற்காக இரும்புக் கம்பிகள், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், திறந்தவெளியில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டு உள்ளன.
வெயில் மற்றும் மண்ணில் கிடப்பதால், இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன.
எனவே, பயன்பாடு இல்லாத பழைய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டடத்தில், இந்த இரும்புக் கம்பிகளை பாதுகாப்பாக வைத்து, பயனாளிகளுக்கு விநியோகிக்க வேண்டும் என, பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

