/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை புறநகரில் விளம்பரங்களை அழிக்கும் பணி மந்தம்
/
செங்கை புறநகரில் விளம்பரங்களை அழிக்கும் பணி மந்தம்
செங்கை புறநகரில் விளம்பரங்களை அழிக்கும் பணி மந்தம்
செங்கை புறநகரில் விளம்பரங்களை அழிக்கும் பணி மந்தம்
ADDED : மார் 19, 2024 03:50 AM

மறைமலை நகர்: நாட்டின் 18வது லோக்சபா நடத்தை விதிமுறைகள், கடந்த 16ம் தேதி அமலுக்கு வந்தது.
இதையடுத்து, போலீசார் செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலை, திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தாம்பரம் போலீஸ் கமிஷனர் எல்லை துவங்கும் பகுதியில், மறைமலை நகர் போலீசார் வாகனங்களை நிறுத்தி, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கை புறநகர் பகுதிகளான பரனுார், சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளில், தேர்தல் நடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை. செங்கல்பட்டு பகுதியில் உள்ள அண்ணாதுரை, ராஜிவ்காந்தி சிலைகள், நகரின் பல பகுதிகளில் உள்ள ஆளும் கட்சி தோரணங்கள் உள்ளிட்டவை அகற்றப்படாமல் உள்ளன.
பரனுார் ரயில்வே மேம்பாலம், தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்ல சுற்றுச்சுவர் உள்ளிட்டவற்றில், தி.மு.க.,வின் சுவர் விளம்பரங்கள் மறைக்கப்படாமல் இருந்தன.
பல இடங்களில், நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டு உள்ள கட்சி கொடிகள் அகற்றப்படாமல் உள்ளன. பல ஊராட்சிகளில், தேர்தல் நடத்தை விதிகளை யாரும் கண்டுகொள்ளவில்லை.
சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காமராஜர், காந்தி, எம்.ஜி.ஆர்., சிலைகள் பிளாஸ்டிக் கோணிகள் வாயிலாக மூடப்பட்டு உள்ளன.
ஆனால், அதே பகுதியில் எதிர் திசையில் தி.மு.க.,வின் கட்சி கொடி, பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளன.

