/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பணி பாதுகாப்பு சட்டம் கோரி செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம்
/
பணி பாதுகாப்பு சட்டம் கோரி செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம்
பணி பாதுகாப்பு சட்டம் கோரி செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம்
பணி பாதுகாப்பு சட்டம் கோரி செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 13, 2025 10:55 PM
செங்கல்பட்டு:தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில், செங்கல்பட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழகம், செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் அருகில், மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமையில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
அனைத்து பள்ளிகளுக்கும், அடிப்படை பணியாளர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளைக் களைதல் மற்றும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு, கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலர் ஆறுமுகம், மாநில பொதுச்செயலர் எழிலரசன் உள்ளிட்ட பலர் பேசினர்.