ADDED : ஜூலை 30, 2025 11:56 PM

அ நிறம் | அளவு
திருப்போரூர்:திருப்போரூரில், பல்வேறு திட்ட பணிகள் துவக்க விழா, பேரூராட்சி தலைவர் தேவராஜ் தலைமையில் நடந்தது.
திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், கூடுதல் கலெக்டர் நாராயண சர்மா முன்னிலை வகித்தனர்.
இதில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, 98 லட்சம் ரூபாய் மதிப்பில், திருப்போரூர் பேரூராட்சி அலுவலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
